பள்ளியில் படிக்கும் போதே தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்
பள்ளியில் படிக்கும் போதே தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நாகையில் நடந்த தன்னம்பிக்கை வழிகாட்டுதல் கருத்தரங்கில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேசினார்.
பள்ளியில் படிக்கும் போதே தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நாகையில் நடந்த தன்னம்பிக்கை வழிகாட்டுதல் கருத்தரங்கில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேசினார்.
வழிகாட்டுதல் கருத்தரங்கம்
நாகை ஏ.டி.ஜே. தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சிலையும் நீ, சிற்பியும் நீ என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான தன்னம்பிக்கை வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
மனிதவளம் மேம்பாட்டு பயிற்சியாளர்கள் முருகபாரதி, ஆதிகிருஷ்ணன், நீதிராஜா ஆகியோர் கலந்துகொண்டு வழிகாட்டுதல் பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி பேசும்போது கூறியதாவது:-
பள்ளியில் படிக்கும் போது தனித்திறமைகளையும் சேர்த்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தனித்திறமை
வாழ்க்கையின் லட்சியத்தை தேர்ந்தெடுத்து அது எந்த துறையாக இருந்தாலும் உங்களுக்கு பிடித்த அதிக ஆர்வம் கொண்ட துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நவீன காலத்தில் முன்னணி நிறுவனங்கள் மாணவர்களின் மதிப்பெண்களை பார்த்து வேலைக்கு தேர்வு செய்வதில்லை.. அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் என்ன கற்றுக்கொண்டார்கள், தனித்திறமைகளை வைத்து தான் தேர்வு செய்கிறார்கள். அதிகம் கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கையின் ஒரு அங்கம் வேலை. அந்த வேலையை நமக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுத்து அதில் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டும் என்றார்