புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும்
கோட்டூர் அருகே புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர் அருகே புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடம்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வீராக்கி, சுமைதாங்கி, குன்னியூர் மற்றும் அக்ரகாரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 490 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, மண்எண்ணெய், சீனி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்காக அக்ரகாரம் கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.இந்த கட்டிடம் கட்டப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பொருட்கள் வாங்க பொதுமக்கள் அச்சம்
இதனால் கட்டிடத்தில் உள்ளே வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மழையில் நனைந்து வருகிறது. இதனால் கடை அருகில் நின்று பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள்.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை அக்ரகாரத்தில் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.