பாலம்பாக்கம் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டித்தர வேண்டும்
பாலம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டித்தர வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா பாலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
போளூர் தாலுகா முக்குரும்மை ஊராட்சிக்கு உட்பட்ட பாலம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அரசு அறிவுரையின்படி பழுதான கட்டிடங்களை அப்புறப்படுத்தும் திட்டத்தில் கடந்த ஆண்டு இரண்டு வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டது.
தற்போது 50 மாணவர்கள் ஒரே வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் பயின்று வருகின்றனர். இதனால் மழை, வெயில் காலங்களில் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story