தேசிய கல்வி கொள்கையால் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முடியும்; கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் தகவல்


தேசிய கல்வி கொள்கையால் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முடியும்; கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் தகவல்
x

தேசிய கல்வி கொள்கையால் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முடியும் என்று கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் தெரிவித்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேசிய கல்வி கொள்கை 2020 அமலாக்கத்தின் 3 ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. அப்போது பள்ளியின் முதல்வர் கல்யாணராமன் நிருபர்களிடம் கூறுகையில், தேசிய கல்வி கொள்கையால் கற்றல், கற்பித்தலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை துடிப்பான அறிவு சமுதாயமாக மாற்ற தேசிய கல்வி கொள்கை துணை புரிகிறது. இதனால் ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் அவர்களுக்கு உரிய தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முடியும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2022-23 கல்வி ஆண்டில் இருந்து பிரி கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., 1, 2-ம் வகுப்பு என 5 ஆண்டுகள் ஆரம்பித்து, 3 முதல் 5-ம் வகுப்பு வரை அடுத்து 3 ஆண்டுகளாகவும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை அடுத்து 3 ஆண்டுகளாகவும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை 4 ஆண்டுகளாகவும் என மொத்தம் 15 ஆண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான திறன் அடிப்படையில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், அடிப்படை கணினி, செயற்கை நுண்ணறிவு போன்ற பாடங்களை தொழில் கல்வி பாடமாக அறிமுகம் செய்துள்ளது. குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு முக்கியம் என்று தேசிய கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக பல்வேறு பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டதால் ஆசிரியர்கள் எளிய முறையில் பாடங்களை மாணவ-மாணவிகளுக்கு கற்பிக்க முடிகிறது, என்றார். அப்போது ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உடனிருந்தனர்.


Next Story