3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கம்


3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கம்
x

கோப்புப்படம் 

விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற்றது.

சென்னை,

இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரைக்கு நேரில் வந்து விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை கண்டு களித்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததையடுத்து மெரினாவில் இருந்து மக்கள் கிளம்பி வருகின்றனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் புறப்பட்ட நிலையில் பல இடங்களிலும் நெரிசல் காணப்படுகிறது. சென்னை அண்ணா சாலை, ஆர்.கே. சாலை, செம்மொழி பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி செல்கின்றன.

இந்த நிலையில் மக்களின் வசதிக்காக 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வண்ணாரப்பேட்டை - ஏஜி டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரெயில்கள் 3.5 நிமிட இடைவெளியில் இயங்கும். மேலும் காரிடார்-1 பிரிவில் விம்கோ நகர் டிப்போ - விமான நிலையம் இடையே 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயங்கும். பசுமை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் - செயின்ட் தாமஸ் மவுண்ட் இடையே வழக்கம்போல 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story