மெட்ரோ ரெயில் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த லோடு வேன்


மெட்ரோ ரெயில் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த லோடு வேன்
x

போளூர் அருகே மெட்ரோ ரெயில் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லோடு வேன் கவிழ்ந்தது.

சென்னை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த காளசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 22). லோடு வேன் டிரைவரான இவர், நேற்று காலை போரூரில் இருந்து லோடு வேனில் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார். போரூர், அய்யப்பந்தாங்கல் அருகே மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் அருகில் உயர் அழுத்த மின்சார வயர்கள் பூமியில் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதியில் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லோடு வேன் திடீரென தடுப்பை உடைத்து கொண்டு 6 அடி பள்ளத்துக்குள் கவிழ்ந்தது.

இதுகுறித்து பூந்தமல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் லோடு வேனை வெளியே தூக்கி அதில் சிக்கியிருந்த ராஜேஷை உயிருடன் மீட்டனர். பின்னர் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story