திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 92.47 சதவீதம் பேர் தேர்ச்சி


திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 92.47 சதவீதம் பேர் தேர்ச்சி
x

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 92.47 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருவள்ளூர்

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், பொன்னேரி ஆகிய 2 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 371 பள்ளிகளை சேர்ந்த 41 ஆயிரத்து 534 மாணவர்கள் 134 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்கள். இதில் ஆண்கள் 20 ஆயிரத்து 101 நபர்களும், பெண்கள் 21 ஆயிரத்து 433 பேர் தேர்வு எழுதினார்கள். நேற்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் ஆண்கள் 17 ஆயிரத்து 939 பேரும், பெண்கள் 20 ஆயிரத்து 469 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட அளவில் ஆண்கள் 89.2 சதவீதமும், பெண்கள் 95.5 சதவீதமும் தேர்ச்சி நிலையில், மொத்தம் மாவட்டத்தில் 38 ஆயிரத்து 408 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.47 சதவீதம் ஆகும். மாவட்டத்தில் 119 அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 84.6 ஆகும். 2 அரசு பள்ளிகள் மட்டும் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன.


Next Story