ரூ.91½ லட்சத்தில் சுகாதார நிலையம், அலுவலக கட்டுமான பணிகள்


ரூ.91½ லட்சத்தில் சுகாதார நிலையம், அலுவலக கட்டுமான பணிகள்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு பகுதியில் ரூ.91½ லட்சத்தில் சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேடு பகுதியில் ரூ.91½ லட்சத்தில் சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

சுகாதார நிலையம்

நாகை மாவட்டம் வாய்மேடு ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.68.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.இதில் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம் முருகையன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி மற்றும் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் பழனியப்பன், துரைராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அலுவலக கட்டிடம்

இதேபோல அண்ணாப்பேட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கான பணியையும் கலெக்டர் தொடங்கி வைத்தார்.மேலும், ஆயக்காரன்புலம்-1 ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் 15-வது மத்திய நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.11.62 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரதிவிராஜ், மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

கலந்து கொண்டோர்

இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள் வனிதா ரவிச்சந்திரன், நெல்சன்யாசர் பிரபு மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story