7.5% இடஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது


7.5% இடஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது
x
தினத்தந்தி 5 Aug 2023 10:42 AM IST (Updated: 5 Aug 2023 11:17 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவப்படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் விடுதி, தேர்வு உள்ளிட்ட எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என மருத்துவக்கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

சென்னை,

மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் விடுதி, பயிற்சி, தேர்வு உள்ளிட்ட எந்தக் கட்டணமும் வாங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு, தனியார், சுயநிதி மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேரும் மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story