வல்லூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு


வல்லூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
x

வல்லூா் அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர்

மீஞ்சூர் அடுத்த வல்லூர் கிராமத்தில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான எரிசக்தி துறையும் தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து வல்லூர் தேசிய அனல்மின் நிலையத்தை அமைத்துள்ளது. இங்கு மூன்று யூனிட்டுகளில் தலா 500 வீதம் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தமிழ்நாட்டிற்கு 1,069 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. முதல் யூனிட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை சரி செய்யும் பணியின் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story