சென்னையில் 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


சென்னையில் 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x

சென்னையில் 5 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல நல அதிகாரி டாக்டர் வேல்முருகன் தலைமையில் சுகாதார அதிகாரி கே.வாசுதேவன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அலெக்ஸ் பாண்டி, செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய குழு சென்னை பிராட்வே ஆண்டர்சன் தெருவில் உள்ள குடோன்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள குடோனில் சிறிய மற்றும் பெரிய வகை பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அந்த குடோனில் இருந்து 5 டன் அளவு எடைகொண்ட தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குடோனின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கும் இது போன்ற கடைகள், குடோன்கள் இருப்பது தெரியவந்தால் பொதுமக்கள் உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் கொடுக்க முன்வர வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story