காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கனிமங்களை ஏற்றி சென்ற 4 லாரிகள் பறிமுதல்
காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கனிமங்களை ஏற்றி சென்ற 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டம் செவிலிமேடு கீழம்பி செல்லும் சந்திப்பு சாலையில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அதிகாரிகளுடன் வாகனங்களை ஆய்வு செய்தார். அப்போது கனிமங்கள் ஏற்றி சென்ற லாரிகளை நிறுத்தி உரிய நடைச்சீட்டு பெற்று செல்கிறதா என ஆய்வு மேற்கொண்டு, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்களை அழைத்து அவ்வழியே செல்லும் வாகனங்களில் ஆவணங்களை சரிபார்க்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து அதிகாரிகளின் ஆய்வில் உரிய நடைச்சீட்டு இன்றி கனிமங்களை ஏற்றிச் சென்ற 4 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த ஆய்வின் போது புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குநர் ஆறுமுகம் நயினார், உதவி புவியியலாளர் சரவணன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தனி துணை வட்டாட்சியர் பூபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story