கீழடி அருங்காட்சியகத்துக்கு 38 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை


கீழடி அருங்காட்சியகத்துக்கு 38 ஆயிரம்  பார்வையாளர்கள் வருகை
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 4:52 PM IST)
t-max-icont-min-icon

கடந்த மாதத்தில் மட்டும் கீழடி அருங்காட்சியகத்தை 38 ஆயிரம் போ் பார்வையிட்டுள்ளனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

கடந்த மாதத்தில் மட்டும் கீழடி அருங்காட்சியகத்தை 38 ஆயிரம் போ் பார்வையிட்டுள்ளனர்.

கீழடி அருங்காட்சியகம்

திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். பின்பு மார்ச் 6-ந் தேதி முதல் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். கீழடி அருங்காட்சியகத்தில் தினசரி பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வெளி மாநிலத்தினர், வெளிநாட்டினர் என ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி தினமும் சுமார் 1500 பேர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்களை பார்வையிட்டு செல்கின்றனர். விடுமுறை காலங்களில் எண்ணிக்கை அதிகரித்து தினமும் சுமார் 2000 பேர் வரை பார்வையிட்டு செல்கின்றனர்.

38 ஆயிரம் பேர் பார்வை

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அருங்காட்சியகத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 38 ஆயிரம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.

மேலும் இந்த மாதத்தில் இதுவரை சுமார் 13 ஆயிரம் பேர் பார்வையிட்டு உள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story