ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள் - காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி


ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள் - காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி
x

ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவு இடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

காஞ்சிபுரம்

ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு நாளையொட்டி காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவு இடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே .எஸ்.அழகிரி மலர் வளையம் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திருநாவுக்கரசு, கே .வி.தங்கபாலு, ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை , எம்.பி. வசந்தகுமார், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர். ரத்த கண்ணீர் வருகிறது அஞ்சலி செலுத்திய பின்பு கே .எஸ். அழகிரி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவை அப்போதே 21-ம் நூற்றாண்டுக்கு அழைத்து சென்றவர் ராஜீவ்காந்தி. பல்வேறு வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர். தேசத்தில் எதை வேண்டுமானாலும் ஏற்று கொள்ளலாமல், ஆனால் பயங்கரவாதம், மத வெறியை ஏற்று கொள்ள முடியாது. இப்பொது அந்த கொலையாளின் விடுதலையை திருவிழா போல் கொண்டாடுவது எங்கள் இதயத்தில் ரத்த கண்ணீரை வரவைக்கிறது.

மனிதாபத்தோடு வாழ்வது தான் மனித தன்மை என்று நாங்கள் கருதுகிறோம். குற்றவாளி கடவுள் ஆக முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜோதி ஊர்வலம் முன்னாதாக சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திராவியம் தலைமையில் சென்னையில் இருந்து ராஜீவ் ஜோதி ஊர் வலமாக மோட்டார் சைக்கிள் மூலம் கொண்டுவரப்பட்டு அழகிரியிடம் வழங்கப்

பட்டது. இந்த ஜோதி தமிழ் நாடு, கர்நாடக, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக டெல்லி சென்று அடைந்து அங்கு ராஜீவ்காந்தி சமாதி உள்ள வீர் பூமியில் சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்படும்.


Next Story