கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடிய 3 பேர் கைது


கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பேரின்பராஜ் மகன் ராஜசேகர் (வயது 30). இவர் பிசியோதெரபிஸ்டாக உள்ளார். இவருடைய சகோதரர் செண்பகராஜ் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்ப்பதற்காக ராஜசேகர் சென்றார். அங்கிருந்து உணவு வாங்குவதற்காக வெளியே சென்றபோது தன்னுடைய செல்போனை அண்ணன் அருகில் வைத்து விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது செல்போன் திருடு போனது தெரியவந்தது.

இதுதொடர்பாக ராஜசேகர் கோவில்பட்டி கிழக்கு ேபாலீஸ் நிலைய குற்றப்பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் காந்தி, கனகசுந்தரம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, கோவில்பட்டி வடக்கு புது கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (42), தெற்கு புது கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் (42), ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த ரமேஷ் (47) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story