திருப்பத்தூர் மாவட்டத்தில் 25 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்


திருப்பத்தூர் மாவட்டத்தில் 25 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்மழையால் 25 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு ஜலகாம்பாறையிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்மழையால் 25 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு ஜலகாம்பாறையிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது.

தொடர்மழை

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலமாக மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாகவே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் பகல் 2 மணிக்கு பிறகு மாவட்டம் முழுவதும் பரவலமாக மழை கொட்டியது. வாணியம்பாடி, வடபுதுப்பட்டு, ஆம்பூர், திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. திருப்பத்தூர் பகுதியில் இரவு முழுவதும் விடிய, விடிய கனமழை கொட்டியது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியது.

தொடர் மழையால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திருப்பத்தூரை அடுத்த குரிசிலாப்பட்டு பகுதியில் உள்ள பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஏலகிரிமலையின் அடிவாரத்தில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

25 ஏரிகள்

மேலும் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 25 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

திருப்பத்தூர்-52, ஆண்டியப்பனூர் அணை-32, ஆலங்காயம்- 38.4, வாணியம்பாடி-52, நாட்டறம்பள்ளி-20, கேத்தாண்டப்பட்டி-17, ஆம்பூர்-13, வடபுதுப்பட்டு-40.80.


Next Story