கணவர் உடலுக்கு உரிமை கோரிய 2 மனைவிகள் - வித்தியாசமான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்


கணவர் உடலுக்கு உரிமை கோரிய 2 மனைவிகள் - வித்தியாசமான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
x

அரசு பஸ் ஓட்டுநராக இருந்த பாலசுப்பிரமணியன் இந்து மதத்தில் ஒரு பெண்ணையும் சிறுபான்மையினர் மதத்தில் ஒரு பெண்ணையும் திருமணம் செய்திருக்கிறார்.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(எ)அன்வர் உசைன். அரசு பஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்த அவர் கடந்த 17ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார்.

தான் இந்துவாக இருந்த போது, இந்து மதத்தில் ஒரு பெண்ணையும் சிறுபான்மையினராக மாறிய பின் அந்த மதத்தில் ஒரு பெண்ணையும் திருமணம் செய்திருந்தார் பாலசுப்பிரமணியன்.

தனது முதல் மனைவியுடனான விவாகரத்து வழக்கு முழுவதுமாக முடிவடையாத நிலையிலேயே அவர் இரண்டாவது மனைவியை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். எனவே இரண்டு மனைவிகளுமே அவரது உடலை பெற்று, அவரவர் மதத்தின் முறைப்படி இறுதி சடங்கு செய்ய உரிமை கோரினர். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, 30 நிமிடங்கள் இந்து முறைப்படி சடங்குகள் செய்யவும், பிறகு இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து கோர்ட்டு அறிவுறுத்தலின்படி அவரது உடலுக்கு முதல் மனைவி மரியாதை செலுத்திய பிறகு அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசு சார்பில் அவருக்கு கிடைக்கக் கூடிய சலுகைகளை பெறுவது குறித்து இரண்டு தரப்பினரும் பேசி முடிவு செய்யப்படும், அல்லது நீதிமன்றத்தை நாடித் தீர்வை பெறுவார்கள் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.


Next Story