2 புதிய மின்மாற்றிகள் அமைப்பு


2 புதிய மின்மாற்றிகள் அமைப்பு
x

2 புதிய மின்மாற்றிகள் அமைப்பு

நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நாட்டார்மங்கலம் மற்றும் வடகரை ஊராட்சி திருப்பனையூர் ஆகிய பகுதிகளில் மின் பற்றாக்குறையை போக்கும் விதமாக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக 2 மின்மாற்றிகளை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். திருமருகல் நாகை கோட்ட பொறியாளர் சேகர், திருமருகல் உதவி மின்பொறியாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரஜினிதேவி பாலதண்டாயுதம், மோகன் மற்றும் மின் ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story