2 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவ-மாணவிகள் சாதனை


2 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவ-மாணவிகள் சாதனை
x

2 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

கரூர்

புன்னம் சத்திரம் சேரன் பள்ளி வளாகத்தில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு ெதாடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 550-க்கும் மேற்பட்ட 5 வயது முதல் உள்ள மாணவர்கள், மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், ஆணி, ஐஸ்கட்டி, சைக்கிள், பானை, முட்டை ஆகியவை மீது நின்று கொண்டும், கண்ணை கட்டிக் கொண்டும் மாணவ-மாணவிகள் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


Next Story