கடைகளில் திருடிய 2 சிறுவர்கள் கைது
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:-
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொம்மிடியில் அதே பகுதியை சேர்ந்த முகமது சுல்தான் அசார் (வயது29) என்பவரது ஓட்டல், வினோபாஜி தெருவில் சக்திகணேசன் என்பவரது ஐஸ்கிரீம் கடை, கணேசன் என்பவரது ஓட்டல் ஆகியவற்றில் ஷட்டரை உடைத்து பணம் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கைதான 2 பேரும் 11-ம் வகுப்பு வரை படித்து விட்டு படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் மீது தீவட்டிப்பட்டி, தொப்பூர், அதியமான்கோட்டை, பென்னாகரம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story