காஞ்சீபுரத்தில் விவசாயிகளுக்கு ரூ.1¾ கோடியில் வேளாண் எந்திரங்கள்


காஞ்சீபுரத்தில் விவசாயிகளுக்கு ரூ.1¾ கோடியில் வேளாண் எந்திரங்கள்
x

காஞ்சீபுரத்தில் ரூ.1¾ கோடியில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

காஞ்சிபுரம்

விவசாய எந்திரங்கள்

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குறைந்து வரும் விவசாயிகளின் நல உடமையினைக் கருத்தில் கொண்டு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில், விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.1.90 கோடி மானியத்தில் 221 பவர் டில்லர்கள் மற்றும் 4 விசைகளை யெடுப்பான் கருவிகள் ஆக மொத்தம் 225 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

அதன்படி நேற்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடியே 73 லட்ச மானியத்தில் 198 பவர் டில்லர்கள் மற்றும் 4 விசை களையெடுப்பான் கருவிகளை விவசாயிகளுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் வழங்கினார்கள்.

அமைச்சர் வழங்கினார்

மேலும் ஒரு பயனாளிக்கு கரும்பு சாகுபடிக்கு ரூ.1.14 கோடி மதிப்புள்ள கரும்பு அறுவடை எந்திரம், ரூ.45 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில், வங்கி நிதி உதவியுடன் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story