கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,466 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- மாநகராட்சி நடவடிக்கை


கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,466 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- மாநகராட்சி நடவடிக்கை
x

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,466 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி நடவடிக்கையால் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 10-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 8 ஆயிரத்து 813 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் ஆய்வு மேற்கொண்டு 2 ஆயிரத்து 631 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 1,466 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.9 லட்சத்து 85 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் கடந்த 10-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 1,492 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 62 கடை உரிமையாளர்களிடமிருந்து 50.9 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த 10-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரிந்த 284 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story