அரசு பள்ளிகளில் மேலும் 1,000 வகுப்பறை கட்டடங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 55 லட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ. கோவிந்தராஜனுடன், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள வகுப்பறைகளுக்குள் சென்று மாணவர்களை நன்றாக படிக்குமாறு அவர் ஊக்கப்படுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அடுத்த வாரம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மேலும் 1,000 வகுப்பறை கட்டடங்கள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 55 லட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான மிகச்சிறந்த மாற்றம் விரைவில் வரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Related Tags :
Next Story