தமிழ் மொழியில் 100 சட்டப்புத்தகங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
தமிழ் மொழியில் பதிப்பிக்கப்பட்ட100 சட்டப்புத்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
சென்னை,
கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தால் 100 சட்டங்களை புத்தக வடிவில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 37 மத்திய சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு சட்டங்களில், 43 மறுமதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள், 20 புதிய பதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள் என மொத்தம் 100 சட்டப் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டன.
இந்த புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சட்டப்புத்தகங்களை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story