நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்


நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
x

வெண்ணந்தூரில் நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

நாமக்கல்

வெண்ணந்தூர்

வெண்ணந்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நாமக்கல் கால்நடை பராமரிப்பு துறை மாவட்ட சார்பில் கோழிநோய் ஆராய்ச்சி ஆய்வுகூடம் உதவி இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வெறிநோயின் முக்கியத்துவம், நோய் பரவும் முறை குறித்து விரிவாக பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் கலந்து கொண்டர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி இலவமாக போடப்பட்டது. தொடர்ந்து வெறிநோயை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் பயிலரங்கம் நடைபெற்றது.

இம்முகாமில் மருத்துவர்கள் வெங்கடேஷ், பார்த்தசாரதி, சுகுமார், சிவசக்தி, ஜனனிஜெகபிரியா, கோமதி, நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story