மரத்தில் தொங்கும் மரப்பெட்டி நூலகம்


மரத்தில் தொங்கும் மரப்பெட்டி நூலகம்
x

பள்ளி மாணவர்களுக்காக மரத்தின் மீது நூலகங்களை உருவாக்கியிருக்கிறது, அசாமைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான ஜே.சி.ஐ. பெமினா.

மரியானி என்ற இடத்தில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் சிறிய பெட்டிகளில் புத்தகங்களை வைத்து தொங்கவிட்டுள்ளனர்.

இதில் அசாமி, இந்தி மற்றும் ஆங்கில நூல்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கான கதை புத்தகம் முதல் பொது அறிவுப் புத்தகங்கள் வரை இந்த மர நூலகத்தில் அடங்கியுள்ளன.

இது குறித்து தன்னார்வ அமைப்பின் தலைவர் தீபிகா கூறும்போது, ''இந்த நூலகங்களை அமைப்பதற்காக நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளோம். தனியாக ஒரு தச்சரைக் கொண்டு, வீட்டில் பயன்படுத்திய மரச்சாமான்களை நூலக பெட்டிகளாக மாற்றினோம். இதற்காக ரூ.15 ஆயிரம் வரை செலவழித்துள்ளோம். மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள இந்த நூல்களை பராமரிக்க தனியாக ஓர் ஆசிரியரை நியமிக்கவும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் 422 மாணவிகளும் இந்த நூலகத்தால் பயனடைவர்" என்றார்.


Next Story