புதிய அம்சங்களுடன் டி.வி.எஸ். ரேடியோன்


புதிய அம்சங்களுடன் டி.வி.எஸ். ரேடியோன்
x

டி.வி.எஸ். மோட்டார் தயாரிப்புகளில் 110 சி.சி. பிரிவில் மிகவும் பிரபலமாகத் திகழும் ரேடியோன் மோட்டார் சைக்கிள் தற்போது மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் தற்போது டி.வி.எஸ். நிறுவனத்தின் பிரத்யேக அம்சமான ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இது சிக்னலில் நிற்கும்போது தானாக என்ஜின் செயல்பாட்டை நிறுத்திவிடும். பின்னர் ஆக்சிலரேட்டை திருகினால் ஆன் ஆகி ஓடத் தொடங்கும். இதனால் இது எரிபொருள் சிக்கனத்துக்கு வழிவகுக்கிறது.

இது 109.7 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. 8.3 ஹெச்.பி. திறனையும், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது.

இதில் டியூபுலர் பிரேம் பயன்படுத்தப் பட்டுள்ளது. 10 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்டதாக இதன் டேங்க் உள்ளது. பல வண்ணத்திலான எல்.சி.டி. திரை, எரிபொருள் செலவு விவரம், சராசரி வேகம், சர்வீஸ் அறிவுறுத்தல், பேட்டரி திறன் குறைவது, கடிகாரம் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்ய வசதியாக யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட்டும் உள்ளது. எல்.சி.டி. கிளஸ்டர், இரட்டை வண்ணம் ஆகியன இதன் சிறப்பம்சமாகும். இதன் விலை சுமார் ரூ.59,925. பிரீமியம் மாடல் விலை சுமார் ரூ.71,966.


Next Story