அபாச்சே ஆர்.ஆர் 310 வடிவமைப்பில் பி.எம்.டபிள்யூ.


அபாச்சே ஆர்.ஆர் 310 வடிவமைப்பில் பி.எம்.டபிள்யூ.
x

பிரீமியம் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு டி.வி.எஸ். நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது அபாச்சே மாடலாகும். இதில் அபாச்சே ஆர்.ஆர் 310 வடிவமைப்பைப் போன்ற மோட்டார் சைக்கிளை பி.எம்.டபிள்யூ. அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பை எல்.இ.டி. புரொஜெக்டர் முகப்பு விளக்கு இடம்பெற்றுள்ளது. இதில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஷாக் அப்சார்பர், புளூடூத் இணைப்பு வசதியில் செயல்படும் டி.எப்.டி. டிஸ்பிளே உள்ளது. நான்கு விதமான ஓட்டும் நிலைகள் இதில் உள்ளன.

இது 312 சி.சி. லிக்விட் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. 34 ஹெச்.பி. திறனை 9,700 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7,700 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும்.


Next Story