சாம்சங் கேலக்ஸி ஏ 14


சாம்சங் கேலக்ஸி ஏ 14
x

5-ஜி அலைக்கற்றை யில் செயல்படும் கேலக்ஸி ஏ 14 மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மின்னணு சாதன தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி சீரிஸ் மிகுந்த வரவேற்பைப் பெற்ற மாடலாகும். இதில் தற்போது 5-ஜி அலைக்கற்றை யில் செயல்படும் கேலக்ஸி ஏ 14 மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் கேலக்ஸி ஏ 23 என்ற மாடலையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி 5-ஜி அலைக்கற்றை வரிசையில் செயல்படும் ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னிலை வகிக்க திட்டமிட்டுள்ளது. இவை இரண்டுமே 16 ஜி.பி. ரேம் கொண்டவையாக அறிமுகமாகியுள்ளன. அத்துடன் நீண்ட நேரம் செயல்படும் வகையில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியை இவை கொண்டுள்ளன. சிவப்பு, இளம் பச்சை, கருப்பு உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் இவை வெளிவந்துள்ளன. இது 6.6 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் உள்ள பேட்டரி 2 நாட்கள் வரை செயல்படுவ தோடு நிலைத்திருக்கும் தன்மை கொண்டது.

இதில் 50 மெகா பிக்ஸெல் குவாட்கோர் கேமரா மிகச் சிறப்பான புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. அத்துடன் வீடியோ காட்சிகளை பதிவு செய்யவும் இது உதவியாக உள்ளது. இதேபோல செல்பி புகைப்படம் எடுக்க வசதியாக முன்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

இதில் நாக்ஸ் செக்யூரிட்டி என்ற பாதுகாப்பு சிப் உள்ளது. இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோ காட்சிகள், தகவல் தொகுப்புகள் பாதுகாப்பாக வைத்திருக்க வழியேற்படுத்தியுள்ளது. இதில் உள்ள பிளாக் செயின் தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பாக தகவல் தொகுப்பு மற்றும் புகைப்படம், வீடியோ காட்சிகளை உரிய நபர்களுக்கு மட்டுமே பகிர முடியும். இதில் எக்ஸினோஸ் 1330 ஆக்டாகோர் பிராசஸர் உள்ளது. கேலக்ஸி ஏ 23 மாடல் விலை சுமார் ரூ.22,999. இதில் ஏ 14 மாடல் விலை சுமார் ரூ.16,499.


Next Story