`பிளேர் புரோ' வயர்லெஸ் இயர்போன்
பிட்ரோன் நிறுவனம் புதிதாக பிளேர் புரோ என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
இது வீடியோகேம் விளையாடுவோருக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகும். நீண்ட நேரம் செயல்படும் திறன் மற்றும் சிறப்பாக ஒலியை வெளியிடும் திறன் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ட்ரூடாக் தொழில்நுட்பம் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தும் போது ஸ்மார்ட்போனுக்கு அழைப்புகள் வந்தால் அப்போது சுற்றுப்புற இரைச்சலை முற்றிலுமாக தவிர்த்துவிடும். ஹெச்.டி. மைக்ரோபோன் இரண்டு உள்ளது. இது எடை (தலா 3.5 கிராம்) குறைவானது. ஆர்.ஜி.பி. விளக்குகள் வீடியோ கேம் விளையாடும்போது வேறு வண்ணத்திலும், ஸ்மார்ட்போனில் உரையாடும்போது வேறு வண்ணத்திலும் பளிச்சிடும். புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டது. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 35 மணி நேரம் செயல்படும். பேட்டரி திறன் குறைவதை உணர்த்தும் இண்டிகேட்டர் உள்ளது. கூகுள் அசிஸ்டென்ட், ஆப்பிள் சிரீ உள்ளிட்ட வற்றின் குரல்வழி கட்டுப்பாடு மூலம் இதை செயல்படுத்தலாம்.
கருப்பு, நீலம், மஞ்சள் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,299.