ஓப்போ பேட் ஏர் டேப்லெட்
ஓப்போ நிறுவனம் புதிதாக ஓப்போ வெர்ஸ் என்ற பெயரில் புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.
இது 10.36 அங்குல திரையைக் கொண்டது. இதன் எடை 440 கிராம். இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 680 சிப்செட் உள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) சிஸ்டம் பூஸ்டர் உள்ளது. 7100 எம்.ஏ.ஹெச் பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. பின்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது.
இதில் குவாட் ஸ்பீக்கர் டால்பி அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம், கலர் ஓ.எஸ். 12 இயங்குதளம் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் அடிப்படையில் உருவாக்கப் பட்டது. இதில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் வசதி, ஸ்டைலஸ் பேனா உள்ளது. 18 கிராம் எடை கொண்டதாக உள்ள இதில் 650 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. கிரே வண்ணத்தில் வந்துள்ள இதன் விலை சுமார் ரூ.16,999. இதில் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.19,999.
Related Tags :
Next Story