நாய்ஸ் வயர்லெஸ் இயர்போன்
நாய்ஸ் நிறுவனம் முதல் முறையாக வீடியோ கேம் பிரியர்களுக்கென இயர்போனை வெளியிட்டுள்ளது.
இது மிகத் துல்லியமாக ஒலியை அளிக்கக் கூடியது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 36 மணி நேரம் செயல்படும். வீடியோ கேம் மட்டுமின்றி, வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் இணையவழி நிகர் நிலை கூட்டங்களில் பங்கேற்கவும் இது மிகவும் உதவியாக இருக்கும். எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் சிறப்பான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இது புளூடூத் வி 5.3 இணைப்பு வசதி கொண்டது. இயர்போனில் 8 மணி நேரம் செயல்படுவதற்கான பேட்டரியும், சார்ஜிங் கேசில் 37 மணி நேரம் செயல்படுவதற்கான பேட்டரியும் உள்ளது. குரல்வழி கட்டுப்பாடு மூலமும் இதை இயக்கலாம். கருப்பு, வெள்ளை மற்றும் கிரே வண்ணங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.1,499.
Related Tags :
Next Story