மாருதி நெக்ஸா - பிளாக் எடிஷன்


மாருதி நெக்ஸா - பிளாக் எடிஷன்
x

மாருதி நிறுவனம் தனது பிரீமியம் கார்களான நெக்ஸா மாடல்களில் பிளாக் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி இக்னிஸ், பலேனோ, சியாஸ், எக்ஸ்.எல் 6 மற்றும் கிராண்ட் விடாரா ஆகிய மாடல்கள் பிளாக் எடிஷன்களில் வந்துள்ளன. இந்தியாவில் மாருதி சுஸுகி தனது உற்பத்தியைத் தொடங்கி 40 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் வகையில் இந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இக்னிஸ் மாடலில் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்கள் பிளாக் எடிஷனில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.6.47 லட்சம் முதல் சுமார் ரூ.7.72 லட்சம். இதேபோல சியாஸ் மற்றும் பலேனோ ஆகிய மாடல்களும் பிளாக் எடிஷனில் வந்துள்ளது. சியாஸ் மாடலின் விலை சுமார் ரூ.8.99 லட்சம் முதல் சுமார் ரூ.11.99 லட்சம். பலேனோ மாடலின் விலை சுமார் ரூ.6.99 லட்சம் முதல் சுமார் ரூ.9.71 லட்சம்.

எக்ஸ்.எல் 6 மாடலில் ஆல்பா மற்றும் ஆல்பா பிளஸ் பிளாக் எடிஷன் மாடல்களின் விலை சுமார் ரூ.12.99 லட்சம் முதல் சுமார் ரூ.14.39 லட்சம். கிராண்ட் விடாராவில் ஜெட்டா மாடலின் விலை சுமார் ரூ.13.89 லட்சம் முதல் சுமார் ரூ.19.49 லட்சம்.


Next Story