சூப்பர் ஸ்பிளெண்டர் அறிமுகம்

சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஸ்பிளெண்டர் மோட்டார் சைக்கிள் மிகவும் பிரபலமானது.
எரிபொருள் சிக்கனமான இந்த மோட்டார் சைக்கிள் மக்கள் மத்தியில் பிரபலமானதாகத் திகழ்கிறது. தற்போது 125 சி.சி. திறன் கொண்ட சூப்பர் ஸ்பிளெண்டரை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதில் டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர், எரிபொருள் தீர்வதை உணர்த்தும் இன்டிகேட்டர், வாகன சர்வீஸ் தேதியை நினைவூட்டு தல், தவறாக செயல்பட்டால் அதை உணர்த்துவது உள்ளிட்ட தகவல் களை அளிக்கும். புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. எல்.இ.டி. முகப்பு விளக்கு, அதிக வெளிச்சத்தை அளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டருக்கு 68 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய யு.எஸ்.பி. போர்ட் உள்ளது. சைடு ஸ்டாண்ட் போட்டிருந்தால் என்ஜின் ஸ்டார்ட் ஆகாது. கிரே, கருப்பு, சிவப்பு வண்ணங்களில் கிடைக்கும். பாரத் புகை விதி சோதனைக்கேற்ற என்ஜினைக் கொண்டது. இது 10.7 பி.ஹெச்.பி. திறனை 7,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 10.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை 6 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும்.
டிரம் பிரேக் உள்ள மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.83,368. டிஸ்க் பிரேக் மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.87,268.






