கிழக்கு தொடர்ச்சி மலைகள்


கிழக்கு தொடர்ச்சி மலைகள்
x

மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகள் பெருமளவில் சங்கமிக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். இதில் மேற்கு தொடச்சி மலைகளை பற்றி நாம் நிறைய படித்திருப்போம். ஆனால் கிழக்கு தொடர்ச்சி மலைகளை பற்றி அறிந்து வைத்திருப்பது கொஞ்சம்தான். அதுபற்றி விரிவாக இங்கே காண்போம்...!

இந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் துண்டு, துண்டாக அமைந்துள்ள மலைத் தொடர், கிழக்கு தொடர்ச்சி மலை என்றழைக்கப்படுகிறது. இந்த மலைத் தொடர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இருந்து தொடங்கி சாயமலை, காரிசாத் தான், கரட்டுமலை, கழுகுமலை, கோவில் பட்டி நாலாட்டின்புதூர் குன்று, திருப்பரங் குன்றம், நாகமலை, அழகர்கோவில், யானைமலை, கொல்லி மலை, பச்சைமலை, சேர்வராயன்மலை, கல்வராயன்மலை மற்றும் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் வரை நீண்டு நிற்கின்றது. இவை காலத்தால் மேற்கு தொடர்ச்சி மலைகளைவிட பழமை யானவை. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலையை போன்று தொடர்ச்சியாக இல்லாமல் துண்டு, துண்டாக காணப்படுகிறது.

இதன் முக்கிய காரணம், வங்க கடலில் கலக்கும் கிழக்கு நோக்கி பாயும் நதிகளான மகாநதி, துங்கபத்திரா, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, தாமிரபரணி ஆகிய நதிகள் காலங்காலமாக ஏற்படுத்தும் நில அரிப்புதான். ஆனாலும் இந்த மலைகளின் அடித்திட்டுகள் ஒன்றுக் கொன்று இணைந்தே உள்ளன. கிழக்கு தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடா வுக்கும் இடையில் கடற்கரை சமவெளி காணப்படுகிறது. கருங்கல் பாறைகள், படிகப்பாறைகள், சார்னோகைட், தகட்டுப் பாறையான கோண்டாலைட் ஆகிய பல்வேறு வகையான பாறைகளை கொண்ட தாக கிழக்கு தொடர்ச்சி மலைகள் உள்ளது. மேலும் சுண்ணாம்புக்கல், பாக்சைட், இரும்புத்தாது போன்ற கனிம வளங்களும் கிடைக்கிறது.

கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் தட்ப வெப்பநிலை பொதுவாக குளிர்ச்சியாகவும், சுற்றியுள்ள சமவெளிகளை காட்டிலும் ஈரப்பதம் மிகுந்தும் இருக்கும். இங்குள்ள வறண்ட வனப்பகுதிகளில் காப்பி தோட்டங் கள் பயிரிடப்படுகின்றன. கிழக்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு மலைக் குன்றுகள் வெவ்வேறு பெயர்களுடன் காணப்படுகின்றன. இதன் உயரமான சிகரம், ஆந்திராவில் உள்ள ஜிந்தகடா மலையாகும். இதன் உயரம் 1,690 மீட்டர். உயரம் குறைவான பல குன்றுகளும் உள்ளன. இவற்றில் சிறுமலை, கரந்தை மலை குன்றுகள் குறிப்பிட தகுந்தவை.

கிழக்கு தொடர்ச்சி மலையில் இயற்கையாக வளர்கின்ற அரிய மூலிகைகளும், காய்கறிகள், பழங்கள், நறுமண பொருட்கள் மற்றும் விவசாயம் ஆகியவை இங்கு வாழும் மக்களுக்கு வாழ்வாதாரமாக திகழ் கின்றது. மழைக்காலங்களில் பசுமையாக வும், கோடைகாலங்களில் வறட்சியாகவும் காணப்படும் இந்த மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களின் வாழ்க்கை முறைகளும், பழக்கவழக்கங் களும் தொன்மை வாய்ந்தவை.

மேற்கு தொடர்ச்சி மலையைவிட உயரத்தில் குறைவாக இருந்தாலும், கிழக்கு தொடர்ச்சி மலையின் வேர்ப்பகுதி பூமியின் அடி ஆழம் வரை இணைந்துள்ளது. இவை நீலகிரி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடருடன் இணைகிறது. அந்த மலைகள் துண்டு, துண்டாக உள்ளது மட்டுமல்லாமல் அவற்றை ஒட்டியுள்ள காடுகளும் ஒரே மாதிரியாக இல்லை. பசுமை மாறா காடுகள் முதல் புதர்க்காடுகள் வரை 9 வகைகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. மழை அளவுகளும், தட்பவெப்ப நிலைகளும் உயரத்திற்கு ஏற்றவாறு மாறு படுகின்றன. தனித்தனியாக அமைந்திருக் கும் இந்த மலைகள் குடியிருப்புகளாலும், விவசாய நிலங்களாலும் சூழப்பட்டு இருக் கின்றன. இதனால் அந்த மலையையும் காடுகளையும் பாதுகாப்பது பெரும் சவாலாகவே இருக்கிறது. எனினும் மேற்கு தொடர்ச்சி மலையை ேபான்று கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பிலும், வன அடர்த்தியை கண் காணிப்பதிலும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அக்கறை காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story