போட் ஹெட்போன், இயர்போன்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போட் நிறுவனம் வயர்லெஸ் இயர்போன், வயர்லெஸ் நெக்பேண்ட் மற்றும் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.
நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து லிமிடெட் எடிஷனாக இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டி.வி.யில் நெட்பிளிக்ஸ் மூலமான காட்சிகளைப் பார்க்கும்போது சிறப்பான அனுபவத்தை அளிக்கும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் இதில் உள்ளது. போட் ஏர்டோப்ஸ் 411 மாடல் புளூடூத் இணைப்பு வசதி கொண்டது.
ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு, லேப்டாப், மியூசிக் பிளேயர் ஆகியவற்றுடன் இணைத்து பயன்படுத்த முடியும். இது 17 மணி நேரம் தொடர்ந்து செயல்படும் திறன் கொண்டது. போட் நிர்வானா ஹெட்போன் 751 தொடர்ந்து 65 மணி நேரம் இயங்கக் கூடியது. இது 33 டெசிபல் இசையை வெளிப்படுத்தக் கூடியது. வயர்லெஸ் மூலம் செயல்படும் இந்த ஹெட்போனை ஏ.யு.எக்ஸ். கேபிளில் இணைத்தும் பயன்படுத்தலாம். ஏர்டோப்ஸ் விலை சுமார் ரூ.1,799. ஹெட்போனின் விலை சுமார் ரூ.3,999.
Related Tags :
Next Story