அட்டாக் ஆன் டைட்டன் இறுதி அத்தியாயம் பகுதி-4

ஜப்பான் நாட்டைச்சேர்ந்த ‘மங்காங்கா’ ஹிசயாமா உருவாக்கிய கதாபாத்திரங்களைக் கொண்டு கடந்த 2013-ம் ஆண்டு எடுக்கப்பட்ட அனிமேஷன் தொடர் அட்டாக் ஆன் டைட்டன்.
கடந்த 10 ஆண்டுகளாக 80-க்கும் மேற்பட்ட எபிசோடுகள் வந்தநிலையில் இப்போது அதன் இறுதி அத்தியாயத்தை நெருங்கி உள்ளது. தன் அம்மா மற்றும் சிறுவயது தோழி மிகாசா உடன் கிராமத்தில் அமைதியாக நாயகன் ஏரன் யேகர் வசித்து வருகிறான். கிராமத்தை பாதுகாக்க அமைக்கப்பட்ட மதில் சுவர்களை கடந்து திடீரென ராட்சதர்கள் உள்ளே நுழைகிறார்கள். இதில் ஏரனின் கண்முன்னே அவனது அம்மா கொல்லப்படுகிறார். அவனது வீடுடன் சேர்ந்து அந்த கிராமம் நொறுக்கப்படுகிறது.
இந்த ராட்சசர்களை கூண்டோடு அழிக்க சிறப்பு படையில் தன்னை சேர்த்துக்கொண்டு சிறுவயது முதலே ஏரன் தீவிர பயிற்சி மேற்கொள்கிறான். அந்த ராட்சதர்கள் யார்? எங்கு இருந்து அவர்கள் வந்தார்கள்? எதற்காக மக்களை கொத்து கொத்தாக கொலை செய்கிறார்கள் என்பதை பல திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள். திடீரென ஏரனுக்கும் ராட்சதனாக மாறும் சக்தி கிடைக்கிறது. அதை வைத்து ராட்சதகர்களுக்கு எதிராக வீறுகொண்டு எழுகிறான். கேப்டன் லேவி, ஆஞ்சி, பிரவுனர், காபி போன்ற கதாபாத்திரங்களின் பின்கதை சிறப்பாக கையாளப்பட்டு உள்ளன.
முன்பு அமைத்த எபிசோடுகளை விடவும் இந்த இறுதி அத்தியாயம் அனிமேஷன், இசை, பாத்திர வடிவமைப்பு என அனைத்திலும் பட்டையை கிளப்புகிறது. வார இறுதி நாட்களில் ஆன்லைனில் வெளியாகிறது. இந்த நூற்றாண்டின் சிறந்த கலைப்படைப்புகளில் ஒன்றாக அட்டாக் ஆன் டைட்டன் இடம்பெற வாய்ப்பு உள்ளது.