அமெரிக்க மணப்பெண்ணின் இந்திய திருமண மோகம்


அமெரிக்க மணப்பெண்ணின் இந்திய திருமண மோகம்
x

நம் நாட்டு பெண்கள் மேலை நாட்டு கலாசாரம் மீது நாட்டம் கொண்டிருக்கும் நிலையில் அங்கு வசிப்பவர்கள் நம் நாட்டு கலாசாரத்தை பின்பற்றுவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.

எப்போதும் மார்டன் உடையில் வலம் வந்தவர் திருமணத்திற்கு தங்கள் கலாசார ஆடையை தேர்ந்தெடுக்காமல், இந்திய இளம்பெண்கள் திருமண நிகழ்வுகளின்போது அணியும் ஆடையை உடுத்தி இருந்தாலும் அது அவர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது.

திருமண பந்தம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாக அமையும். திருமணத்திற்கு அலங்காரம் செய்வது முதல் அனைவரையும் கவரும் வண்ணம் திருமண உடையை தேர்வு செய்வது வரை கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.

நம் நாட்டு பெண்கள் மேலை நாட்டு கலாசாரம் மீது நாட்டம் கொண்டிருக்கும் நிலையில் அங்கு வசிப்பவர்கள் நம் நாட்டு கலாசாரத்தை பின்பற்றுவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். அது நடை, உடை, பாவனையிலும் வெளிப்படுகிறது. அமெரிக்க பெண் ஒருவர் இந்திய இளம் பெண்கள் விரும்பி அணியும் லெஹங்கா உடுத்தி மணக்கோலத்தில் காட்சி அளிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

அந்த வீடியோவில், மணப்பெண் ஒரு அறையில் இருந்து சிவப்பு நிற லெஹங்கா அணிந்தபடி வெளியே வருகிறார். அவரை எதிர்பார்த்து அவரது நண்பர்கள், குடும்பத்தினர்கள் காத்திருக்கிறார்கள். மணக்கோலத்தில் அவரை பார்த்ததும் ஆச்சரியப்படுகிறார்கள். அவர் உடுத்திருக்கும் ஆடை அவர்களை வெகுவாக கவர்ந்திருப்பதே அதற்கு காரணம்.

எப்போதும் மார்டன் உடையில் வலம் வந்தவர் திருமணத்திற்கு தங்கள் கலாசார ஆடையை தேர்ந்தெடுக்காமல் இந்திய இளம்பெண்கள் திருமண நிகழ்வுகளின்போது அணியும் ஆடையை உடுத்தி இருந்தாலும் அது அவர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. மணப்பெண்ணை அரவணைத்து பலரும் திருமண வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள்.

"நீங்கள் இந்திய பாரம்பரிய திருமண உடையில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்'' என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 4 லட்சத்துக்கும் அதிகமான 'லைக்'க்குகளை குவித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்திவானி பகுதியில் மணப்பெண் தனக்கு விலை உயர்ந்த லெஹங்கா வாங்கி கொடுக்காததால் திருமணத்தையே நிறுத்திவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

மாப்பிள்ளை வீட்டார் வாங்கி கொடுத்த லெஹங்கா விலை குறைவாக இருப்பதாக கூறி அதனை அணிந்து கொள்வதற்கு அந்த மணப்பெண் மறுத்துவிட்டார். மணமகனின் தந்தை விருப்பமான லெஹங்காவை வாங்கிக்கொள்ளுமாறு அந்த பெண்ணுக்கு தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்தபோதும் அவர் ஏற்றுகொள்ள மறுத்துவிட்டார்.


Next Story