வெப்பக்காற்றில் சமைக்கும் கருவி - ஏர் ஃப்ரையர்
உணவுப் பொருள் சமைக்க எண்ணெய் இன்றி சமைக்க இயலாது. ஆனால் பல சமயங்களில் எண்ணை உணவுப் பொருட்கள் நமக்கு ஒத்துக்கொள்வதில்லை. எண்ணெயில் சமைக்கப்பட்டது என்பதற்காகவே பல விருப்பமான உணவுகளை நாம் உண்ண முடியாமல் போகிறது. குறிப்பாக பெரியவர்களுக்கு எண்ணெய் உணவு ஒத்துக்க கொள்ளாது.
இதனால் அவர்கள் விரும்பும் எண்ணெய் உணவுகளை சுவைக்க முடியாமல் போகிறது. ஏர் பிரியர் இருந்தால் அவர்கள் விரும்பிய உணவுகளை சமைத்து மகிழலாம். ஏர் ஃப்ரையர் அந்த ஏக்கத்தை நீக்குகிறது. ஏர் ஃப்ரையரில் வறுவல் பொரியலை சமைக்கும்போது வழக்கமாக தேவைப்படும் எண்ணையில் 20 சதவீதத்திற்கும் குறைந்த அளவு எண்ணெய் தேவைப்படுகிறது. காரணம் இது வெப்ப காற்றால் உணவுகளை சமைக்கிறது. இது உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு விருப்பமான உணவுகளை அதே சுவையோடு சுவைப்பதற்கு வழிவகுக்கிறது. ஏர் ஃப்ரையர் சமைப்பது எப்படி அதை பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றி காண்போம்.
ஏர் ஃப்ரையர் சமைப்பதற்கு வெப்ப காற்றை பயன்படுத்துகிறது. இதற்கு எண்ணெய் தேவையில்லை. நாம் உள்ளே வைக்கும் உணவுகளை வெப்ப காற்றின் மூலமாக இது சமைத்து முடிக்கிறது. நறுமணத்தோடு சுவையையும் கொடுக்கிறது. ஏர் ஃப்ரையர் வெப்ப காற்றை உணவுகளுக்கு இடையில் செலுத்தி உணவை சமைக்கின்றது. அதனால் உணவுகள் சமமாக ஒரே சீராக சமைக்கப்படுகின்றது. இப்போது நீங்கள் உருளைக்கிழங்கு வருவல் சமைக்க வேண்டும் என்றால் நீங்கள் உருளைக்கிழங்கையும் அதற்கு தேவையான மசாலாக்களின் தடைவி அதை உள்ளே வைத்து விட வேண்டும். ஏர் ஃப்ரையர் வெப்ப காற்றை உருளைக்கிழங்கு இடையில் செலுத்தி அதை சமைக்கின்றது. ஒருவேளை உங்களுக்கு எண்ணெய் வேண்டும் என்றால் தேவையான அளவு அதில் ஊற்றலாம்.
பொதுவாக இந்திய உணவு பல கட்டங்களில் சமைக்கப்படுகின்றது. உதாரணமாக ஒரு காய்கறி அல்லது இறைச்சி வருவல் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் முதலில் எண்ணையை ஊற்றி அதில் வெங்காயத்தை போடுங்கள். ஏர் ஃப்ரையர் ஆன் செய்யுங்கள்; வெங்காயம் பொன்னிறமாக வரும் நிலையில் ஏர்ஃபெயரை ஆப் செய்து மூடியை திறந்து மசாலாக்களை அதில் போடுங்கள்; மீண்டும் ஆன் செய்யுங்கள்; மசாலா வாடை மாறி நல்ல நறுமணம் வரும்போது மீண்டும் ஏர் ஃப்ரையர் ஆப் செய்துவிட்டு தேவையான காய்கறிகள் அல்லது இறைச்சிகளை அதில் போட்டு தேவையான உப்பையும் சேர்த்து மூடி மீண்டும் ஏர் ஃப்ரையர் ஆன் செய்யுங்கள். காய்கறிகளை நீங்கள் வறுக்குகிறீர்கள் என்றால் ஐந்து நிமிடம், இறைச்சியை சமைக்கிறீர்கள் என்றால் 15 நிமிடம் இருந்தால் போதும். சுவையான நறுமணமான உடலுக்கு நன்மை விளைவிக்க கூடிய நல்ல உணவு தயாராகிவிடும். ஒருவேளை காய்கறிகளோ இறைச்சியோ சமைப்பதற்கு முன்பு வேக வைக்க வேண்டும் என்றால் அதை தனியாக ஒரு குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஏர் ஃப்ரையரில் வைத்து வழக்கம்போல் சமயங்கள்.
பொதுவாக ஏர் ஃப்ரையரில் எந்த ஒரு சமையலும் 20 நிமிடத்திற்கு மேல் சமைக்க வேண்டிய தேவை இருக்காது. இந்த 20 நிமிடம் சமைக்க அது எடுத்துக் கொள்ளும் மின்சாரத்தின் அளவு 0.25 யூனிட்டுகளே. நீங்கள் ஒருவேளை இரண்டு முறை சமைக்க வேண்டும் என்றாலும் கூட ஒரு நாளுக்கு செலவாகும் மின்சாரத்தின் அளவு 0.5 யூனிட்டுகள் மட்டுமே. இது மின்சாரத்தை சேமித்து மின் கட்டணத்தை குறைக்கிறது. காஸை விட சிக்கனமானது.
ஏர் ஃப்ரையர் ஹீட்டரை பயன்படுத்தி முதலில் வெப்பக் காற்றை உண்டு பண்ணும்; தேவையான அளவு வெப்ப காற்று கிடைத்ததும் ஹீட்டர் தானாகவே அணைந்து கொள்ளும்; பிறகு அந்த வெப்ப காற்றின் வெப்ப அளவு குறைந்ததும் மீண்டும் அதுவே ஆன் செய்து கொள்ளும். நாம் அருகில் இருந்து சமைக்க வேண்டிய தேவை இல்லை. நீங்கள் சமைக்க வேண்டிய பொருட்களை உள்ளே ஏர் ஃப்ரையருக்குள் வைத்துவிட்டு ஆன் செய்துவிட்டு நிம்மதியாக சோபாவில் அமர்ந்து டிவி பார்க்கலாம். சமையல் முடிந்ததும் ஏர் ஃப்ரைய ரில் உள்ள அலாரம் ஓசை எழுப்பி சமையல் முடிந்து விட்டதை நமக்கு தெரிவிக்கும். எந்த ஒரு சமையலாக இருந்தாலும் சில நிமிடங்களிலேயே இதில் சமைத்து முடித்து விடலாம்.
இப்படி பல நன்மைகளை கொண்ட ஏர் பிரியர் வாங்கி உணவு சமைத்து உடல் நலத்தை பாதுகாப்பதோடு விரும்பிய உணவை சுவைத்து மகிழுங்கள்.