மத்திய அரசு துறைகளில் 20 ஆயிரம் வேலை வாய்ப்புகள்
மத்திய அரசின் பல்வேறு துறைகளிலுள்ள குரூப்-பி, மற்றும் குரூப் - சி காலி பணி இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலி இடங்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரம் ஆகும்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகளை ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (Staff Selection commission) அமைப்பு செய்து வருகிறது. இதை சுருக்கமாக எஸ்.எஸ்.சி. (S.S.C.) என்பார்கள்.
10-ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள் என்று 3 வகையான கல்வித்தகுதி அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்வது உள்பட பல்வேறு ஆட்சேர்ப்பு பணிகளை இந்த அமைப்பு செய்கிறது.
20 ஆயிரம் காலியிடங்கள்-பதவிகள்
தற்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளிலுள்ள குரூப்-பி, மற்றும் குரூப் - சி காலி பணி இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கான (Combined Graduate Level Exam) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலி இடங்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரம் ஆகும்.
உதவி தணிக்கை அலுவலர், உதவி கணக்கு அலுவலர், ரெயில்வே, மத்திய தலைமை செயலகம், வெளியுறவுத்துறை, நுண்ணறிவு அமைப்பு (Intelligence Bureau), போன்ற துறைகளில் உதவி பிரிவு அலுவலர், Income Tax, Central Excise, அஞ்சல் துறை, போதை பொருள் தடுப்பு போன்ற துறைகளில் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள், தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) போன்றவற்றில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள், இளநிலை புள்ளியியல் ஆய்வாளர், ஆடிட்டர், உதவி அமலாக்கத்துறை அலுவலர் உள்ளிட்ட முப்பத்தைந்து வகையான பணி காலியிடங்கள் இதில் அடங்கும்.
இந்த தேர்வுக்கு தமிழகத்தைச்சேர்ந்த பல பட்டதாரிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வு குறித்த விரிவான தகவல்கள், பாடத்திட்டங்கள், தேர்வு அணுகுமுறைகள், தேர்வுக்கான பயிற்சி விவரங்கள் போன்றவற்றை இந்த கட்டுரையில் இருக்கின்றோம்.
2 கட்ட தேர்வுகள்
எஸ்.எஸ்.சி. சி.ஜி.எல்.இ 2022 (SSC-CGLE 2022) என்று அழைக்கப்படும் இந்த தேர்வு முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. விண்ணப்பிப்பது முதல் தேர்வு எழுதுவது வரை அனைத்தும் ஆன்லைன் மூலமே செய்யப்படுகிறது.
தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தப்படும். முதல் கட்ட தேர்வு டயர் 1 (Tier 1) என்றும், இரண்டாம் கட்ட தேர்வு டயர் 2 (Tier 2) என்றும் அழைக்கப்படும். இவை இரண்டும் ஆன்லைன் மூலம் கணினி வழி (Computer Based Exam) தேர்வாகவே நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வினாக்கள் கொள்குறி வகையினதாக (Objective Type) இருக்கும்.
வினாக்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
நெகட்டிவ் மதிப்பெண் முறை (Negative Marking) பின்பற்றப்படுகிறது. அதாவது நீங்கள் தவறாக விடையளிக்கும் ஒவ்வொரு வினாவிற்கும் 0.5 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
முதல்நிலைத் தேர்வில் வங்கித்தேர்வை போன்று ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி கட்-ஆப் (Section Cutoff) கிடையாது.
மொத்தமுள்ள 100 வினாக்களில், எத்தனை வினாக்களுக்கு சரியாக விடையளித்துள்ளீர்கள் என்பது மட்டுமே பார்க்கப்படுகிறது.
முதல்நிலைத் தேர்வு 60 நிமிடம் நடைபெறும்.
பொதுஅறிவு, ஆங்கிலம், கணிதம் போன்றவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அதன் விவரம் வருமாறு:
General Intelligence and Reasoning (25 கேள்விகள், 50 மதிப்பெண்கள்)
General Awareness (25 கேள்விகள், 50 மதிப்பெண்கள்)
Quantitative Aptitude (25 கேள்விகள், 50 மதிப்பெண்கள்)
English Comprehension (25 கேள்விகள், 50 மதிப்பெண்கள்)
முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், இரண்டாம் நிலைத் தேர்வுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். இறுதி கட்ட செலக்சனுக்கு முதல்நிலைத் தேர்வின் மதிப் பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
இரண்டாம் கட்டத் தேர்வு
இரண்டாம் கட்டத்தேர்வும் கொள்குறி வகையில்தான் இருக்கும். இதிலும் நெகட்டிவ் மதிப்பெண் முறை (Negative Marking) இருக்கும்.
இரண்டாம் கட்டத் தேர்விலும் கணிதம், ஆங்கிலம், பொது அறிவு மற்றும் புத்திக் கூர்மை ஆகிய பகுதிகள் இடம்பெறும். இத்துடன் கணினி அறிவு தொடர்பான 20 வினாக்கள் அடங்கிய பகுதியும் உண்டு.
இரண்டாம் அமர்வில் (Session -2) கணினியில் தட்டச்சு செய்யும் தேர்வு (Data Entry Speed Test) நடைபெறும். இதற்கான கால அளவு 15 நிமிடங்கள்.
இளநிலை புள்ளியியல் அலுவலர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் புள்ளியியல் தேர்வு (இரண்டாம் தாள்) நடைபெறும். இதைப்போலவே உதவித் தணிக்கை அலுவலர், உதவிக் கணக்கு அலுவலர் பதவிகளுக்கு நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பாக ஒரு தேர்வு நடைபெறும்.
எஸ்.எஸ்.சி தேர்வுகள் கடினமானவை, ஆங்கிலப் பகுதிக்கு விடையளிப்பது கடினம். ஆங்கிலம் தெரியாது, கணிதம் எனக்கு வராது, ரீசனிங் (Reasoning) எனக்கு புரியாது. இவை எஸ்.எஸ்.சி தேர்வுகளை எழுதாமைக்கு மாணவர்கள் கூறும் காரணங்கள்.
இந்த தடைகளைத்தாண்டி எஸ்.எஸ்.சி. தேர்வுகள் எழுதி வெற்றி பெறுவது மிகவும் எளிதானது. அது எப்படி என்பதை அடுத்த வாரம் காண்போம்.
எஸ்.எஸ்.சி தேர்வுகள் கடினமானவை, ஆங்கிலப் பகுதிக்கு விடையளிப்பது கடினம்.
ஆங்கிலம் தெரியாது, கணிதம் எனக்கு வராது, ரீசனிங் (Reasoning) எனக்கு புரியாது. இவை எஸ்.எஸ்.சி தேர்வுகளை எழுதாமைக்கு மாணவர்கள் கூறும் காரணங்கள்.