தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்க சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா


தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்க சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
x
தினத்தந்தி 19 Sept 2023 1:00 AM IST (Updated: 19 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்க சார்பில் 67-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று நடைபெற உள்ளது

மும்பை,

தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கம் சார்பாக 67-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில் சிலை தாதர், மாகிம், டி. ஜங்ஷன், மெயின் ரோடு, வழியாக தாராவி தேவர்நகரில் சுந்தரவிநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. விநாயகர் சிலை அலங்கரிக்கபபட்ட சப்பரத்தில் மேளதாளம், கரகாட்டத்துடன் தமிழர்கள் பராம்பரியம்படி உற்சாகமாக கொண்டு வரப்பட உள்ளது. தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவுக்கு தலைவர் பட்டத்தேவர் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் பரமசிவன், துணைத்தலைவர்கள், தர்மகர்த்தா சங்கரபாண்டியன், பொருளாளர் வேலு, இணைசெயலாளர் கருத்தப்பாண்டியன், துணை செயலாளர்கள், தணிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.


Next Story