சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு


சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM (Updated: 8 Oct 2023 6:47 PM)
t-max-icont-min-icon

சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்

மும்பை,

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, சம்பவத்தன்று கோபர்கைர்னே பகுதியில் வசிக்கும் சகோதரனை பார்க்க மும்பை வந்தாள். அப்போது சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சகோதரர் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் சிறுமி 34 வாரம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சகோதரர் தனது தங்கையிடம் இதுபற்றி விசாரித்தார். இதில் உத்தரபிரதேசத்தில் உள்ள சித்தார்த் நகர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் சிறுமியை பல தடவை பலாத்காரம் செய்ததாகவும், இதன் காரணமாக சிறுமி கர்ப்பம் அடைந்ததும் தெரியவந்தது. இதுபற்றி சிறுமியின் சகோதரர் நவிமும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய உத்தரபிரதேச வாலிபரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story