முகநூல் மூலம் பழகி திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணிடம் பணம் பறித்தவருக்கு வலைவீச்சு


முகநூல் மூலம் பழகி திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணிடம் பணம் பறித்தவருக்கு வலைவீச்சு
x

முகநூல் மூலம் பழகி திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணிடம் பணம் பறித்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.

மும்பை,

முகநூல் மூலம் பழகி திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணிடம் பணம் பறித்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.

பணம் பறிப்பு

மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பீகாரை சேர்ந்த பெரோஸ் செய்யது என்பவர் முகநூல் மூலம் அறிமுகம் ஆனார். 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். இந்தநிலையில் திடீரென ஒருநாள் பெரோஸ் செய்யது பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார். மேலும் திருமணம் செய்யவில்லை எனில் தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். இதையடுத்து பெண், அவரை திருமணம் செய்ய ஒத்து கொண்டார்.

இந்தநிலையில் ெபரோஸ் செய்யது தாய், தந்தை இறந்துவிட்டனர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி பெண்ணிடம் இருந்து ரூ.1¼ லட்சத்தை வாங்கினார்.

வலைவீச்சு

மேலும் பெண்ணை திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்தநிலையில் சமீபத்தில் பெரோஸ் செய்யதுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்தது அந்தேரி பெண்ணுக்கு தெரியவந்தது. அவர் திருமணம் செய்வதாக ஏமாற்றி தன்னிடம் பணம் பறித்த பெரோஸ் செய்யது மீது சாக்கிநாக்கா போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் புகார் தொடர்பாக பெரோஸ் செய்யது மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.


Next Story