செல்போன் செயலி மூலம் கடன் கொடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் சிக்கியது


செல்போன் செயலி மூலம் கடன் கொடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் சிக்கியது
x

செல்போன் செயலி மூலம் கடன் கொடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

பால்கர் மாவட்டம் வசாய்-விரார் பகுதிகளில் செல்போன் செயலி மூலம் உடனடி கடன் வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறித்து வருவதாக மிராபயந்தர்-வசாய் விரார் போலீசாருக்கு புகார் ஒன்று வந்தது. இந்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தீபக் மிஸ்ரா (வயது27) என்பவர் ரூபி டைகர் என்ற செயலியை இயக்கி வந்து உள்ளார். இவர் மற்றும் 21 வயது பெண் என 5 பேர் சேர்ந்து செயலி மூலம் அவசர கடன் வழங்குவதாக கூறி உள்ளனர். பின்னர் கடன் பெற்ற நபர்களை மிரட்டி அவர்களை ஆபாசமாக சித்தரித்து அவரது தொடர்பில் உள்ள நம்பர்களுக்கு அனுப்பி விடுவதை வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் பயந்தரில் செயல்பட்டு வந்த தீபக் மிஸ்ரா உள்பட 5 பேரை பிடித்து கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story