பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கு; ராகுல் காந்தி நேரில் ஆஜராக 26-ந் தேதி வரை விலக்கு - ஐகோர்ட்டு உத்தரவு


பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கு; ராகுல் காந்தி நேரில் ஆஜராக 26-ந் தேதி வரை விலக்கு - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Aug 2023 1:00 AM IST (Updated: 3 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக 26-ந் தேதி வரை விலக்கு அளித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக 26-ந் தேதி வரை விலக்கு அளித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அவதூறு பேச்சு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரபேல் போர் விமான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பேசியபோது பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக விமர்சித்தார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்திலும் இதேபோன்ற விமர்சனத்தை முன்வைத்தார். இது தொடர்பாக மராட்டியத்தை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகியான மகேஷ் ஸ்ரீமால் என்பவர் பிவண்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். மனுவில் அவர், "நரேந்திர மோடியை ராகுல்காந்தி விமர்சித்ததன் மூலம் பா.ஜனதா தொண்டர்களை திருடர்கள் என்று கூறி திட்டமிட்டு அவதூறு பரப்பி உள்ளார்" என்று கூறியிருந்தார்.

நேரில் ஆஜராக விலக்கு

இந்த வழக்கில் ராகுல்காந்தி நேரில் ஆஜராகுமாறு கடந்த 2021-ம் ஆண்டு பிவண்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு ராகுல்காந்தி பிவண்டி கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து இடைக்கால நிவாரணம் வழங்கி இருந்தது. இந்த வழக்கு நேற்று ஐகோர்ட்டில் நீதிபதி எஸ்.வி. கோட்வால் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரரின் வக்கீல் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணை 26-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மேலும் ராகுல்காந்தி விசாரணை கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட இடைக்கால நிவாரணத்தை வருகிற 26-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story