டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தம்; பெஸ்ட் பஸ் சேவை பாதிப்பு; பயணிகள் அவதி

டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தம்; பெஸ்ட் பஸ் சேவை பாதிப்பு; பயணிகள் அவதி
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காட்கோபர், முல்லுண்ட் டிப்போக்களில் டிரைவர்கள் நடத்திய திடீர் வேலை நிறுத்த போராட்டத்தினால் பெஸ்ட் பஸ் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

மும்பை,

காட்கோபர், முல்லுண்ட் டிப்போக்களில் டிரைவர்கள் நடத்திய திடீர் வேலை நிறுத்த போராட்டத்தினால் பெஸ்ட் பஸ் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

பெஸ்ட் பஸ்கள்

மும்பை மாநகராட்சி நடத்தி வரும் பெஸ்ட் குழுமம் சார்பில் மும்பை, தானே, நவிமும்பை, மிரா பயந்தர் பகுதிகளுக்கு 3,100 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் தினசரி 30 லட்சம் பேர் பயணித்து வருகின்றனர். பெஸ்ட் குழுமம் டாகா குழுமத்திடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்களை பணியமர்த்தி உள்ளது.

வேலை நிறுத்த போராட்டம்

இந்தநிலையில் கிழக்கு புறநகர் பகுதியான காட்கோபர், முல்லுண்ட் பணிமனையில் டாகா குழுமத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் ஊழியர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தினால் பல வழித்தடங்களில் பெஸ்ட் பஸ் சேவை பாதிக்கப்பட்டது. காலை வேளையில் அலுவலகம் செல்பவர்கள் பஸ் சேவையின்றி அவதி அடைந்தனர். ஊதிய உயர்வு கோரிக்கைக்காக 500 ஊழியர்கள் போராட்டத்தில் குதித்து இருப்பதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் பெஸ்ட் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Next Story