எப்போது வேண்டுமானாலும் நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பலாம் - ராம்தாஸ் அத்வாலே கூறுகிறார்


எப்போது வேண்டுமானாலும் நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பலாம் - ராம்தாஸ் அத்வாலே கூறுகிறார்
x
தினத்தந்தி 31 July 2023 1:00 AM IST (Updated: 31 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

நிதிஷ் குமார் எப்போது வேண்டுமானாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பலாம் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

மும்பை,

நிதிஷ் குமார் எப்போது வேண்டுமானாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பலாம் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் கூட்டம்

நாட்டில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டு உள்ளன. இதற்காக எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த கூட்டணியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரும் முக்கிய அங்கம் வகிக்கிறார். கடைசியாக பெங்களூருவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் இருந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் முன்பே வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இது குறித்து ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:-

கூட்டணிக்கு திரும்பலாம்...

நான் நேற்று பட்னாவில் இருந்தேன், எதிர்க்கட்சி கூட்டணியின் பெங்களூரு கூட்டத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேறியது குறித்தும், முதல்-மந்திரி நிதிஷ் குமார் அதிருப்திக்கான காரணம் குறித்தும் என்னிடம் கேட்கப்பட்டது. அப்போது நான் நிதிஷ் குமாருக்கு எதிர்க்கட்சிகள் கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டால், அவர் அடுத்து மும்பையில் நடக்க இருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு செல்லக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். நிதிஷ் குமார் முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருந்தார். எனவே அவர் எப்போது வேண்டுமானாலும் எங்களின் கூட்டணிக்கு திரும்பி வரலாம் என்றேன். எதிர்க்கட்சி கூட்டணியின் ஒரே திட்டம் மோடியை ஆட்சியை விட்டு அகற்றுவது மட்டும் தான். ஆனால் எங்களது திட்டம் இந்த நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதாகும். மேற்கு வங்கத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு, உத்தவ் பாலாசாகேப் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரால் எந்தவித பயனும் இல்லை. அதே நேரம் மம்தா பானர்ஜியால் மராட்டியத்தில் எதிர்க்கட்சிக்கு எந்த பயனும் இல்லை. மம்தா பானர்ஜிக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே நீண்ட காலமாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் எதிர்க்கட்சி கூட்டணி குழப்பத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story