2½ ஆண்டுகளில் மும்பை குண்டும், குழியுமான சாலை இல்லாத நகரமாக மாறும்; ஏக்நாத் ஷிண்டே பேச்சு
2½ ஆண்டுகளில் மும்பை குண்டும், குழியுமான சாலை இல்லாத நகரமாக மாறும் என ஏக்நாத் ஷிண்ேட கூறியுள்ளார்.
மும்பை,
2½ ஆண்டுகளில் மும்பை குண்டும், குழியுமான சாலை இல்லாத நகரமாக மாறும் என ஏக்நாத் ஷிண்ேட கூறியுள்ளார்.
குழிகள் இல்லாத சாலை
மும்பையில் மழைக்காலங்களில் சாலைகள் மிகவும் மோசமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. சில இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் பல்லாங்குழி போல காட்சி தரும். மோசமான சாலைகள் காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்தநிலையில் 2½ ஆண்டுகளில் மும்பை குண்டும், குழியுமான சாலை இல்லாத நகராக மாறும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
காங்கிரீட் சாலைகள்
உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. துக்காராம் காதே நேற்று ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தார். இந்த விழாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:- நகரில் முன்பு தார் சாலைகள் போடப்பட்டன. இதனால் மழைக்காலங்களில் மக்கள் மோசமான ரோட்டில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். 2½ ஆண்டுகளில் மும்பை குண்டும், குழியுமான சாலைகள் இல்லாத நகராக மாறும். நகர் முழுவதும் காங்கிரீட் சாலைகள் போடப்படும். காங்கிரீட் சாலை போடும் பணி முடிந்த பிறகு, விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.