தாராவி காமராஜர் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி கலைப்போட்டி


தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தாராவி காமராஜர் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி கலைப்போட்டிகள் நடைபெற்றன.

மும்பை,

தாராவி காமராஜர் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி கலைப்போட்டிகள் நடைபெற்றன.

காமராஜர் பிறந்தநாள்

தாராவியில் உள்ள காமராஜர் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கலைப்போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் காமராஜர், அம்பேத்கர், எஸ்.ஐ.இ.எஸ்., பேன்யன் ட்ரி, கம்பன், செயின்ட் ஆண்டனி பள்ளி உள்ளிட்ட 11 பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு நடனம், ரங்கோலி, பேச்சு, பாட்டு, மோனோ ஆக்டிங், ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன போட்டிகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம், கேடயம், கோப்பை வழங்கப்பட்டது.

கலந்துகொண்டோர்

முன்னதாக நடந்த தொடக்க விழாவில் தெட்சணமாற நாடார் சங்க சேர்மன் காசிலிங்கம், செயலாளர் மைக்கிள் ஜார்ஜ், பொருளாளர் பொன்ராஜ், துணை சேர்மன் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செந்தூர் நாகராஜன் காமராஜர் பற்றி மாணவர்கள் இடையே பேசினார். பள்ளி முதல்வர் மைகேல் ராஜ் வரவேற்று பேசினார். மாணவர்கள் காமராஜரின் பெருமைகள் பற்றி இந்தி, மராத்தி, தமிழ், ஆங்கிலத்தில் பேசி அசத்தினர்.


Next Story