பஸ் நிறுத்தங்களில் இ-பைக் சேவை அறிமுகம்


பஸ் நிறுத்தங்களில் இ-பைக் சேவை அறிமுகம்
x

மும்பையில் பெஸ்ட் சார்பில் பஸ் நிறுத்தங்களில் இ-பைக் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மும்பையில் பெஸ்ட் சார்பில் பஸ் நிறுத்தங்களில் இ-பைக் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இ-பைக் சேவை அறிமுகம்

மும்பை மாநகராட்சியின் கீழ் உள்ள பெஸ்ட் போக்குவரத்து நிறுவனம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. ஆன்லைன் டிக்கெட், பஸ் எங்கு வருகிறது, எவ்வளவு நேரத்தில் பஸ் நிறுத்தம் வந்து சேரும் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் செயலி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து உள்ளது.

இந்தநிலையில் சோதனை முயற்சியாக பயணிகள் பஸ் நிறுத்தத்தில் இருந்து அலுவலகம் செல்ல வசதியாக இ-பைக் சேவையை பெஸ்ட் அறிமுகம் செய்து உள்ளது.

ரூ.20 கட்டணம்

பயணிகள் குறைந்தபட்சம் ரூ.20 செலுத்தி இந்த இ-பைக்குகளை பயன்படுத்தலாம். அதன்பிறகு கி.மீ.க்கு ரூ.3 அல்லது ஒரு நிமிடத்திற்கு ரூ.1.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என பெஸ்ட் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து பெஸ்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பயணிகள் பஸ்நிறுத்தத்தில் இருந்து தங்கள் செல்லும் இடத்திற்கு செல்ல இந்த இ-பைக்குகளை பயன்படுத்தலாம். இதற்காக வணிக, குடியிருப்பு பகுதிகளில் இ-பைக் நிலையங்கள் அமைக்கப்படும்" என கூறப்பட்டு உள்ளது.

மும்பையில் தற்போது பி.கே.சி. பகுதியில் இதுபோன்ற இ-பைக் சேவை இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story